» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிர்பயா வழக்கு மேல்முறையீடு: தீர்ப்பு சொல்லும் நேரத்தில் நீதிபதி மயக்கம்: விசாரணை ஒத்திவைப்ப்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 5:50:01 PM (IST)

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர். 

அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பை நீதிபதி பானுமதி உத்தரவு பிறப்பிக்க தயாராகி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த  பாதுகாப்பு அதிகாரிகள் நீதிபதி பானுமதிக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர், அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory