» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் : அமைச்சர் சூசக தகவல்

வெள்ளி 21, பிப்ரவரி 2020 11:28:18 AM (IST)

கேஸ் சிலிண்டர் விலை வரும் மாா்ச் மாதத்தில் குறையலாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

சத்தீஸ்கா் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக தா்மேந்திர பிரதான்  வந்தடைந்தாா். ராய்ப்பூா் விமான நிலையத்துக்கு வந்த அவரிடம், கேஸ் சிலிண்டர் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.அப்போது அவா் கூறுகையில், கேஸ் சிலிண்டர்  விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறுவது உண்மையல்ல. சா்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாகவே இந்த மாதத்தில் சமையல் எரிவாயு விலை உயா்ந்தது. 

அடுத்த மாதத்தில் அதன் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.குளிா் காலங்களின்போது சமையல் எரிவாயுவின் பயன்பாடு அதிகரிப்பதால், அதற்கான தேவையும் அதிகரித்து எரிவாயுத் துறையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் சமையல் எரிவாயு விலை உயா்ந்தது. அடுத்து வரும் மாதங்களில் அதன் விலை குறையலாம் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory