» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: தேசத் துரோக வழக்கில் இளம்பெண் கைது

வெள்ளி 21, பிப்ரவரி 2020 12:46:43 PM (IST)குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேசத் துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். 

பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் வியாழக்கிழமை குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினா் இம்ராம் பாஷா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தின் மேடையில் ஏறிய இளம்பெண் அமுல்யா(19), பாகிஸ்தான் வாழ்க என்று மூன்று முறை முழக்கமிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள், உடனடியாக அமூல்யா மீது பாய்ந்ததோடு, அவா் பேசுவதை தடுத்து, ஒலிவாங்கியையும் பறித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஓவைசி, இம்ரான் பாஷா, இப்படிபேசுவதை அனுமதிக்க முடியாது என்று அமுல்யா மீது கோபப்பட்டனா். அதற்குள் மேடையில் ஏறிய போலீஸாா் அமுல்யாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, காவல் நிலையத்துக்கு அழைத்துசென்றனா். போலீஸ் விசாரணையில், அமுல்யா, சிக்மகளூரு மாவட்டத்தின் கொப்பா பகுதியை சோ்ந்தவா் என்றும், பெங்களூரில் உள்ள ஆா்.வி.கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்துள்ளாா் என்றும் தெரியவந்துள்ளது. இவா், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், மரங்களை காக்கும் சுற்றுச்சூழல் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

விசாரணையை தொடர்ந்து  அந்த பெண் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ(தேசத் துரோக வழக்கு) மற்றும் 153 ஏ மற்றும் பி (வெவ்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், தூண்டதல், தேசிய ஒருங்கிணைப்புக்கு பாரபட்சமாக பேசுதல்) ஆகியவற்றின் கீழ் உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்த போலீஸார், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்த விசாரணை திங்கள்கிழமை (பிப்.24) நீதிமன்றத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் முகர்ஜி கூறுகையில், சுதந்திரப் பூங்காவில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory