» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா முழுவதும் மகா சிவராத்திரி கோலாகலம்: கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

வெள்ளி 21, பிப்ரவரி 2020 5:04:45 PM (IST)மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வாரணாசியில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர்.

தலைநகர் டெல்லியில் உள்ள கவுரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவன் கோயில்களில், மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர். பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டனர். கங்கை கரையில் இருந்து கோயில் நோக்கி வந்த ஒரு சில பக்தர்கள் குழு, உடுக்கை அடித்தபடியும், பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தபடியும் சென்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தர்மா கோவிலில் திரண்ட பெண்கள், நாக பாம்பு சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் கயிறுகட்டியும் வழிபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், இளநீர், வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத், சிவ வழிபாடு செய்தார். 

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் சிவலிங்கத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க திருநீறு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோயிலில், சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சர்பம் மற்றும் நந்திக்கு பால், வில்வ இலை அபிஷேகம் செய்தனர். நேபாளத்தில் அமைந்துள்ள பசுபதிநாத் கோவில் 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில்  மகாசிவராத்திரியை முன்னிட்டு பசுபதிநாத் கோவிலில் வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம்  உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory