» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக பேரவைக்குள் பத்திரிகையாளர்களுக்குத் தடை பேரவைத் தலைவர் உத்தரவு

சனி 22, பிப்ரவரி 2020 11:16:34 AM (IST)

கர்நாடக சட்டப்பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதித்து பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். பேரவைத் தொடரின் போது இங்கு தங்கியிருப்பது எம்எல்ஏக்களின் தனிப்பட்ட நேரமாகும். ஆனால், பத்திரிகையாளர்கள் பேரவைக்குள் வருவதன் மூலம் உறுப்பினர்களின் தனிப்பட்ட நேரம் பாதிக்கப்படுகிறது. 

எனவே, பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் விதமாக பேரவையின் வெளியே ஒரு பகுதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory