» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492 ஆக உயர்வு: 9 பேர் உயிரிழப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 10:20:39 AM (IST)இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,500-ஐ தாண்டிவிட்டது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 23  மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471-ல் இருந்து 492 ஆக இன்று உயர்ந்துள்ளது.  451 இந்தியர்கள் 41 வெளிநாட்டினருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கரோனாவால்  9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 37 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory