» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடுத்த 21 நாட்களுக்கு மொத்த நாடே முடக்கப்படுகிறது : பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 8:15:48 PM (IST)

கரோனா வைரஸ் தாக்குதலை முன்னிட்டு அடுத்த 21 நாட்களுக்கு மொத்த நாடே முடக்கப்படுகிறது என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து  நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவர் கூறும் போது, கடந்த 22 ம் தேதி முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொரு இந்தியனும் கடைபிடித்தார்கள். கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெரிய இன்னலை எப்படி சமாளிப்பது என்பதை நாம் நிரூபித்தோம்.ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது; கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது,பெரியவர்கள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்,சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன.மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன.அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம். பொதுமக்கள் நலன் கருதி இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டு மொத்த நாடே முடக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory