» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அச்சமின்றி நடமாடும் மக்களை சுட உத்தரவு? தெலுங்கானா முதல்வர் கடும் எச்சரிக்கை!!

புதன் 25, மார்ச் 2020 12:11:29 PM (IST)

கரோனா குறித்த அச்சமின்றி ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தெலுங்கானா முதல்வர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரசின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்து சுற்றுவதையும், சாலைகளில் சாவகாசமாக நடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது. 

இதன்மூலம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அர்த்தமற்றதாக மாறிவிடமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் இன்னும் விழிப்புடன் இருந்து கரோனாவில் இருந்து தங்களை பாதுகாப்பதுடன், மற்றவர்களுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

‘அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும். மேலும் தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Mar 27, 2020 - 07:20:31 PM | Posted IP 162.1*****

தெலுங்கர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள், கல்நெஞ்ச குணமுள்ளவர்கள்.. 20 தமிழர்களை சுட்டு கொன்றது மக்களுக்கு ஞாபகம் இருக்கிறது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory