» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: பிளிப்கார்ட் நிறுவன ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

புதன் 25, மார்ச் 2020 7:39:56 PM (IST)

கரோனா வைரஸ் அச்சுறுதலை அடுத்து நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏற்ககெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் மற்றொரு ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனமும் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுவத்துவதாக அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலை அடுத்து அதனை கையாள்வதற்கு ஒரே வழி "சமூக இடைவெளிதான்" எனக் கூறி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதனால் வீடுகளில் இருந்து வெளியே செல்லாமல் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி தேசத்திற்கு உதவுவோம்.  இதுவொரு கடினமான நேரம். இதுபோன்று முன்பு எப்போதும் இருந்ததில்லை. உங்களின் அவசரமான தேவைகளுக்கு சேவை செய்வதே எங்கள் முன்னுரிமையாக இருந்தன, எங்களின் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். விரைவில் நாங்கள் உங்களுக்கான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory