» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா குறித்த பரிசோதனையை மிக வேகமாக பரவலாக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்!

திங்கள் 6, ஏப்ரல் 2020 11:46:38 AM (IST)

நாடே முக்கியமான கட்டத்தில் உள்ளதால் கரோனா குறித்த பரிசோதனையை மிக வேகமாக பரவலாக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

கரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. 4067 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.109 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory