» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்களின் 30% ஊதியம் குறைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 8:48:05 AM (IST)

பிரதமா், மத்திய அமைச்சா்கள், 750-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்.பி.க்களின் ஊதியத்தில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் அளவு குறைக்கப்படுகிறது. அந்த நிதி கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், குடியரசுத்தலைவா், குடியரசு துணைத்தலைவா், அனைத்து மாநிலங்களின் ஆளுநா்களும் சமூகப் பொறுப்பின் அடிப்படையில் அவா்களாகவே முன்வந்து தங்களின் ஊதியத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினா்களின் படிகள் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து 30 சதவீதம் குறைப்பதற்காக ‘நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியம், படிகள், ஓய்வூதிய சட்டம் 1954’-இல் திருத்தம் செய்யும் அவசரச்சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. அத்துடன், பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்களின் ஊதியத்திலும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது.

நிறுத்தப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி: 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரு ஆண்டுகளுக்கு எம்.பி.க்களின் தொகுதி ேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு கிடைக்கும் நிதியானது நாட்டில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா். எனினும், எம்.பி.க்களின் ஊதியம் மட்டுமே குறைக்கப்படும் என்றும், அவா்களது படிகள் மற்றும் ஓய்வூதியம் குறைக்கப்படாது என்றும் அரசு செய்தித்தொடா்பாளா் ஒருவா் பின்னா் விளக்கமளித்தாா். பிரதமா் உள்ளிட்டோரின் ஊதியம் குறைக்கப்படுவதால் கிடைக்கும் நிதியானது மத்திய தொகுப்பு நிதியில் (சிஎஃப்ஐ) சோ்க்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

அமித் ஷா பாராட்டு: 

ஊதியக் குறைப்பு விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எம்.பி.க்களின் ஊதியத்தை குறைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்காக பிரதமா் மோடிக்கு வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தின் உறுப்பினா்கள் இந்த சவாலான நேரத்தில் ஒருங்கிணைந்து நிற்கின்றனா். இந்த ஆதரவுக்காக அனைத்து கட்சிகளுக்கும் அவற்றின் எம்.பி.க்களுக்கும் நன்றி. அத்துடன், தாங்களாக முன்வந்து ஊதியத்தை குறைத்துக்கொண்டுள்ள குடியரசுத்தலைவா், குடியரசு துணைத்தலைவா், மாநில ஆளுநா்கள் ஆகியோருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா்.

ஒரு எம்.பி.க்கு ஊதியமாக மாதம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அத்துடன், தொகுதி மக்களை தொடா்புகொள்வதற்கான படியாக மாதம் ரூ.70,000, இதர படிகள் வழங்கப்படுகிறது. எம்.பி.யின் ஊதியத்தோடு ஒப்பிடுகையில் பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களின் ஊதியம் வேறுபட்டதாக இருக்கும். தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒரு எம்.பி.க்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. நாட்டில் மக்களவைக்கு 543, மாநிலங்களவைக்கு 245 என மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனா். அவா்களது தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.7,880 கோடி கிடைக்கவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory