» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 2 வாரத்தில் இரு மடங்காக உயர்ந்தது: கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

செவ்வாய் 19, மே 2020 12:48:22 PM (IST)

இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து, ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

கடந்த இரண்டு வாரங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மே 6ம் தேதி காலை நிலவரப்படி மொத்தம் 49,391 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1694 பேர் பலியாகியிருந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,182 ஆக இருந்தது. அப்போதைய நிலவரப்படி தினமும் புதிய நோய்த்தொற்று என்பது 3000-க்குள் இருந்தது. அதன்பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி மொத்தம் 101139 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3163 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39174 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35058 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாமிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 11760 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 11745 பேருக்கும், டெல்லியில் 10054 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியல் வருமாறு: (உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது).

மகாராஷ்டிரா - 35058  (1249)

தமிழ்நாடு - 11760 (81)

குஜராத் - 11745 (694)

டெல்லி- 10054 (168)

ராஜஸ்தான் - 5507 (138)

மத்திய பிரதேசம் - 5236 (252)

உத்தர பிரதேசம் - 4605 (118)

மேற்கு வங்காளம் - 2825 (244)

ஆந்திரா - 2474 (50)

பஞ்சாப் - 1980 (37)

தெலுங்கானா - 1597 (35).


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory