» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒன்றிரண்டு கரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டாம் : மத்திய அரசு

செவ்வாய் 19, மே 2020 4:28:36 PM (IST)

ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அலுவலகங்களில் கரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்றும், கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

‘பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும். கட்டிடம் போதுமான அளவு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியை தொடங்க ஏற்றதாக அறிவிக்கப்படும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது. உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். கரோனா உறுதி செய்யப்பட்டாலோ, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினாலோ அவர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory