» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி

வியாழன் 21, மே 2020 4:41:39 PM (IST)

நாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 200 ரயில்களின் பட்டியல்  வெளியிடப்பட்டு, ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பலர் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். 

இதனால் விறுவிறுவென டிக்கெட்டுகள் காலியாகின. முக்கிய நகரங்களுக்கு இடையே 100 ஜோடி ரயில்கள் அறிவிக்கப்பட்டும், அதில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை. இந்நிலையில், நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார். ‘வரும் நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. மே 22 முதல் நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மீண்டும் தொடங்கும். 

அடுத்த 2-3 நாட்களில் வெவ்வேறு ரயில் நிலையங்களின் கவுண்டர்களிலும் முன்பதிவு மீண்டும் தொடங்கும். ரயில் நிலையங்களில் கடைகளை திறக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படும். உணவுப்பொருட்களை பார்சலாக மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இன்று முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று மத்திய மந்திரி கோயல் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory