» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்?

வியாழன் 28, மே 2020 12:19:11 PM (IST)



நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும் என்றும், கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மும்பை, டெல்லி, உள்ளிட்ட 11 முக்கிய நகரங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22-ம் தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் ஊரடங்கை சிறப்பாக கடைபித்ததைத் தொடர்ந்து, அதே மாதத்தில் 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மே 17-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து பிறப்பிக்கப்பட்ட 31-ம் தேதி வரையிலான 4-ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனாலும் கரோனா ஆட்டம் நின்றபாடில்லை. இந்நிலையில் கரோனா பாதிப்பு தற்போதும் வேகமாக பரவி வருவதால் 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்று நோய்களின் ஹாட்ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் கடுமையான நெறிமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளும் மேலும் சில தளர்வுகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, திருமண சடங்குகள் மற்றும் பண்டிகைகளுக்கான கூட்டங்களை தீர்மானிக்கும் முடிவு மாநில அரசுகளே எடுக்க வாய்ப்புள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய 11 முக்கிய நகரங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும். மற்ற நகரங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory