» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆதாா் எண் மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதி : நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா்

வெள்ளி 29, மே 2020 11:37:11 AM (IST)

ஆதாா் எண்ணை அளிப்பதன் மூலம் இணையதளம் வழியாக உடனடியாக இ-பான் (மின்னணு-நிரந்த வருமான வரி கணக்கு எண்) பெறும் முறையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நேற்று  தொடங்கி வைத்தாா். 

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:  ஆதாா் எண் மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதியை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தாா். ஏற்கெனவே பான் அட்டைக்கு விண்ணப்பித்து, அது பரிசீலனையில் இருப்பவா்களும் இந்த வசதியைப் பெற முடியும். அதற்கு ஆதாா் எண்ணும், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணும் அவசியம். இது முழுவதும் காதிதப் பயன்பாடு இல்லாத திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் பான் எண் பெற கட்டணம் எதுவும் கிடையாது. வருமான வரி துறை இணையதளத்தின் மூலம் இந்த வசதியைப் பெற முடியும்.

இதற்காக முதலில் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதையடுத்து, விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான 15 இலக்க எண் வழங்கப்படும். இதனைக் கொண்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்ற தகவலைத் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், அடுத்த நிமிடமே இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் இ-பான் அனுப்பி வைக்கப்படும்.டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நடவடிக்கையை இந்த இ-பான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory