» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் லாக்டவுன் 5வது முறையாக நீட்டிப்பு? மாநில முதல்வர்களிடம் அமித்ஷா கருத்து கேட்பு!

வெள்ளி 29, மே 2020 12:44:25 PM (IST)

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் நீ்ட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களையும் தனித்தனியாக தொலைப்பேசியில் அழைத்து மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கருத்துக்களைக் கேட்டறிந்தார்

4-வது கட்ட லாக்டவுன் முடிய இன்னும் 3 நாட்கள் இருக்கும் இருக்கும் நிலையில் இந்த கருத்துக்கேட்பு நடந்துள்ளது. கடந்த 4 கட்ட லாக்டவுனிலும் பிரதமர் மோடி காணொலி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து அதன்பின் லாக்டவுனை நீட்டிப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டார். முதல்முறையாக மாநில முதல்வர்களுடன் அமித் ஷா லாக்டவுன் தொடர்பாக பேசி கருத்துக்களைக் கேட்டுள்ளார்.

முதல்வர்களுடன் அமித் ஷா என்ன பேசினார் என்பது குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை. இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் " 4-வது கட்ட லாக்டவுன் வரும் 31-ம் தேதியோடு முடிகிறது. அதன்பின் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்துமாநில முதல்வர்களிடம் கருத்துக்களை அமித் ஷா நேற்று கேட்டறிந்தார். மாநிலங்களில் எந்தெந்த பகுதிகளில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது, கவலை தெரிவிக்கும் அம்சங்களாக என்ன உள்ளன. ஜூன் 1-ம் தேதிக்குப்பின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா என்பது குறித்து கேட்டிறிந்தார்.

ஆனால் பெரும்பாலான மாநில முதல்வர்கள் லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும். அதேசமயம், பொருளாதார நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி இயல்பு வாழ்க்ைகக்கு கொண்டுவரலாம் எனத் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தனர். வரும் 31-ம் தேதிவரை பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள், ஹோட்டல்கள், நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளன. அந்தத்தடை மேலும் நீட்டிக்கப்படலாம். லாக்டவுன் காலம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் மத்திய அரசு லாக்டவுன் தொடர்பாக அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory