» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது : வானிலை ஆய்வு மையம்

வெள்ளி 29, மே 2020 3:32:29 PM (IST)

கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 31-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி வருவாக வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால் மத்திய கிழக்கு மற்றும்ட வடமேற்கு தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory