» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு

வெள்ளி 29, மே 2020 8:38:07 PM (IST)

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்  நாடு முழுவதும் கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என தெரிவித்துள்ளார். அம்பன் புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதேபோல் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory