» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு

வெள்ளி 29, மே 2020 8:43:05 PM (IST)பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தனது தாய் ஹீரா பென்னுக்கு பல்வேறு தலைப்புகளில் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதங்கள் அனைத்தும் 1986 ஆண்டிற்கு முந்தையவை ஆகும். 

பிரதமர் மோடி ஒரு இளைஞனாக ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு கடிதம் எழுதும் வழக்கத்தை கொண்டிருந்தாகவும் அதில் சந்தோஷங்கள், நீடித்த நினைவுகள், துக்கங்கள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 3, 2020 - 10:17:42 AM | Posted IP 108.1*****

அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது

சாமிJun 2, 2020 - 01:25:06 PM | Posted IP 162.1*****

அத வச்சு நாக்கு வழிக்கவா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory