» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை

சனி 30, மே 2020 3:55:24 PM (IST)

புதிய கனெக்‌ஷன்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற  டிராய் பரிந்துரை தெரவித்துள்ளது

இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரைகள்: தற்போது தரைவழி தொலைபேசி இணைப்புகளில் இருந்து மொபைல் நம்பருக்கு டயல் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை. இனி, மொபைல் எண்ணுக்கு பேச முன்னதாக பூஜ்யம் சேர்த்து டயல் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டவையாக இருக்கின்றன. அதை 11 இலக்கமாக மாற்றலாம்.  இதற்காக, தற்போது உள்ள 10 இலக்க மொபைல் எண்ணுக்கு முன்பு 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும். 

இதன்மூலம் மொத்தம் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியும் இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் டாங்கிள்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. தற்போது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. ஏற்கெனவே உள்ளதை விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், ஆளுக்கு 7 சிம் வழங்க முடியும்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory