» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு

சனி 30, மே 2020 4:09:24 PM (IST)

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனா பாதிப்பு காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அடுத்து இரண்டாவது பெரிய துறையான கட்டுமானத் துறை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இரண்டாவது காலாண்டில் 2.2% ஆக சரிவடைந்தது. 

நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றதால் ஜூன் காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும். இந்த மாதத்தில், சிமெண்ட் மற்றும் எஃகு உற்பத்தி முறையே 86 சதவீதம்மற்றும் 83.9 சதவீதமாக ஆக சரிவடைந்தது. அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி முறையே 22.8 சதவீதம் மற்றும் 15.5 சதவீதம் சரிவடைந்தது. இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, அல்லது பி.எம்.ஐ, ஏப்ரல் 27.4 ஆக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது, அதே நேரத்தில் வர்த்தக ஏற்றுமதி 60 சதவீதம் சரிவடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory