» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரபிரதேசம், பீகாரில் இடி மின்னல் தாக்கியதில் 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

வெள்ளி 26, ஜூன் 2020 5:42:00 PM (IST)உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இடி மின்னல் தாக்கியதில் 110 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதிட்ட 110 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாட்னாவில் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, புதன்கிழமை முதல் மின்னல் தாக்கி 83 பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவங்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

பீகார் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் பயங்கர இடி, மின்னல் தாக்கியதில் பலி அதிகமாகியுள்ளது. கோபால்கஞ்சில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். நவாதா மற்றும் மதுபானியில் தலா 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில் தலா 6 பேரும், கிழக்கு சம்பரான், தார்பங்கா, பங்க்காவில் தலா 5 பேரும், ககாரியா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், மேற்கு சம்பரான், கிஷன்கஞ்ச், ஜெஹனாபாத், ஜாமுய், பூர்னியா, சபவுல், புக்சார், கைமுர் ஆகிய இடங்களில் தலா 2 பேரும் சமஸ்திபுர், ஷியோஹர், சரண், சித்மார்ஹி, மாதேபுராவில் தலா 1 நபரும் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் நிதிஷ் குமார் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் 38 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளது. பீகாரின் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் 24 பேர் இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர். ஏற்கனவே புதன்கிழமை இம்மாநிலத்தில் மின்னல் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மொத்தமாக இருமாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு 110 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory