» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் பெட்ரோல் விலையை உயர்த்துவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

திங்கள் 29, ஜூன் 2020 5:33:25 PM (IST)

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது ஏன்? என ராகுல் காந்தி  கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 7-ம் தேதியிலிருந்து 22-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தி அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, நேற்று ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 பைசாவாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.77.72 பைசாவுக்கும் இன்று விற்பனையாகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 22 நாட்களாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து கூறுகையில், "கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் விலையை உயர்த்துகிறீர்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory