» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசின் உத்தரவுகளை செயல்படுத்த துவங்கி விட்டோம் : டிக்டாக் இந்தியா அறிவிப்பு

செவ்வாய் 30, ஜூன் 2020 5:49:36 PM (IST)

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு உத்தரவுகளை செயல்படுத்தும் பணிகளை துவங்கிவிட்டதாக டிக்டாக் இந்தியா தெரிவித்து இருக்கிறது.

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் டிக்டாக் இந்தியா நிறுவனம் அரசு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. டிக்டாக் இந்தியா நிறுவனம், மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய பயனர் விவரங்களை வேறு எந்த அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory