» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நெய்வேலி விபத்து: உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் - தமிழக முதல்வருடன் அமித் ஷா பேச்சு

புதன் 1, ஜூலை 2020 5:33:25 PM (IST)

நெய்வேலி மின் உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 யூனிட்டுகள் உள்ளன. இங்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் இன்று (ஜூலை 1) கொதிகலன் பிரிவில் 30 மீட்டர் உயரத்தில் நீராவிக் குழாய் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. 

அப்போது, அங்கு பணியிலிருந்த தொழிலாளர்கள் சுமார் 17 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நெய்வேலி மின்உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.

நிவாரணப் பணிகளுக்கு உதவ, ஏற்கெனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விபத்தினால் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory