» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக சீன செயலிகளுக்கு தடை: மத்திய அமைச்சர் விளக்கம்

வியாழன் 2, ஜூலை 2020 4:53:32 PM (IST)

சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை டிஜிட்டல் ஸ்டிரைக் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீன ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலையடுத்து, இருநாட்டு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை டிஜிட்டல் ஸ்டிரைக் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பிற்காக நாம் 59 செயலிகளை தடை செய்துள்ளோம். நமது எல்லையை மீது கண் வைப்பவர்களை எப்படி எதிர்கொள்வது, நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவல் டிஜிட்டல் ஸ்டிரைக் கூட செய்ய முடியும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory