» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

வியாழன் 2, ஜூலை 2020 5:13:21 PM (IST)ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.18,148 கோடி மதிப்பிலான 33 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து 18,148 கோடி ரூபாய் மதிப்பில் 33 போர் விமானங்களை வாங்கப்பட உள்ளது. இவற்றில் 12 சுகோய் 30 எம்கேஜே ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 எஸ் ரக போர் விமானங்கள் அடங்கும்.

மேலும், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வானிலிருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்டது அஸ்திரா ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory