» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

திங்கள் 6, ஜூலை 2020 11:06:55 AM (IST)

கரோனா பாதிப்பில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு உயர்ந்ததற்கு மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. தற்போது ஆசிய கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு தழுவிய பொது முடக்கம் மார்ச் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் கரோனா வில் தாக்கம் அதிகரித்து விட்டது. ஊரடங்கை சரியான வழியில் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசு மீது விமர்சனம் உள்ளது.

இந்நிலையில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளது. தற்போது ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரைபடம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மத்திய அரசின் எதிர்கால திட்ட கணிப்புகள் தோல்வி என்பது ஆய்வில் தகவல்

1. கரோனா வைரஸ் தொற்று
2. பண மதிப்பிழப்பு
3. ஜிஎஸ்டி அமல்’’ எனப்பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory