» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கான்பூரில் 8 போலீசார் கொல்லப்பட்ட விவகாரம்: பிரபல ரவுடியின் கூட்டாளி என்கவுன்ட்டரில் பலி

புதன் 8, ஜூலை 2020 11:21:03 AM (IST)

கான்பூரில் 8 போலீசார் ரவுடி கும்பலால் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் முக்கியக் குற்றவாளி விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே இன்று போலீசாரார் சுட்டுக்கொல்லப்பட்டார்

உத்தரபிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம், மவுதாஹா கிராமத்தில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய தேடுதலில் அமர் துபே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கான்பூரில் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் கொல்லப்பட்டபின் நடக்கும் 3-வது என்கவுன்ட்டர் இதுவாகும். கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீசார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. ரவுடி விகாஸ் இருக்கும் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ.2.50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும், அவரின் உதவியாளர் அமர் துபே இருக்கும் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தில், மவுதாஹா எனும் கிராமத்தில் அமர் துபே பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை உ.பி. போலீசாரின் சிறப்பு அதிரடிப்படை மவுதாஹா கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்து அமர் துபேயை கைது செய்ய முயன்றனர். 

ஆனால், அமர் துபே போலீசார் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து சிறப்பு அதிரடிப்படையின் ஐஜி அமிதாஷ் யாஷ் நிருபர்களிடம் கூறுகையில் "ஹமிர்பூர் மாவட்டம், மவுதாஹாவில் அமர் துபே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவரை கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை சென்றனர். அப்போது அவர்களை நோக்கி அமர் துபே துப்பாக்கியால் சுட்டதால் அதற்கு போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் அமர் துபே கொல்லப்பட்டார். அவர் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் எனத் தெரிவி்த்திருந்தோம்
​​​​
ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் அமர் துபே இருந்தார். விகாஸ் துபே எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு அளி்ப்பவராக அமர் துபே இருந்தார்,விகாஸ் துபே எங்கு சென்றாலும் உடன் செல்வார்.8 போலீசார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே இருவரை கடந்த வெள்ளிக்கிழமை அதிரடிப் படையினர் சுட்டுக்கொன்றனர். இப்போது 3-வது ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். விகாஸ் துபேயின் உறவினர் ஷாமா, சுரேஷ் வர்மா, உதவியாளர் ரேகா, ரேகாவின் கணவர் தயாசங்கர் அக்னிஹோத்ரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory