» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உஜ்வாலா திட்டத்தில் செப்டம்பர் வரை கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

புதன் 8, ஜூலை 2020 5:42:17 PM (IST)

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் உஜ்வாலா திட்டத்தில் இடம்பிடித்துள்ள ஏழைகளுக்கு இலவசமாக சமையல் கியாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் வரை வழங்கப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் இந்த திட்டத்தை ஜூலை 1-ந்தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை வழங்க கூடுதலா 13,500 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory