» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் குணம்: சுகாதாரத் துறை

புதன் 8, ஜூலை 2020 7:28:53 PM (IST)

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 61.53% ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்ததாவது:நாடு முழுவதும் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக விரிவுபடுத்தியதன் விளைவாக இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.04 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.62 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 1,119 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 795 தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 324. இன்று ஒரே நாளில் நாட்டில் 16,883 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 4,56,830 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory