» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அபிஷேக் பச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கரோனா வைரஸ்

திங்கள் 13, ஜூலை 2020 11:03:08 AM (IST)

அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என  திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி  ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory