» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 13, ஜூலை 2020 4:48:50 PM (IST)

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

சலோனி குமார் தொடர்ந்த வழக்கிற்கும், தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் நீதிபதி கூறினார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory