» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணைய மாட்டேன்: சச்சின் பைலட் திட்டவட்டம்

புதன் 15, ஜூலை 2020 12:15:09 PM (IST)

"எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணையமாட்டேன்" என்று ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் பதவியில் இருந்தும் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நேற்று நீக்கப்பட்டாா். அவருடன் அவரது ஆதரவாளா்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இருவரும் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டனா். காங்கிரஸ் தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கை ராஜஸ்தானில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜகவில் இணையமாட்டேன். தில்லியில் தலைமை பதவிகளில் உள்ளோரின் மனதில் நஞ்சை கலக்க சிலர் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கூறிவருகிறார்கள். அசோக் கெலாட் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் அவர் முன்னாள் முதல்வர் வசுந்திரா செயல்பட்டதை போன்று செயல்படுகிறார்.நான் கண்ணியத்துடன் நடத்தப்பட வில்லை. வேலை செய்ய இடமளிக்கவில்லை என்று சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory