» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வரை விசாரிக்கக் கோரி மனு : நாளை விசாரணை!

புதன் 15, ஜூலை 2020 6:05:41 PM (IST)

சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வரை விசாரிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸாா் தாக்கியதில் வியாபாரிகளான தந்தை, மகன் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனர். இதில் தொடா்புடைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதா், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முதலில் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை மற்றும் மகன் இருவரும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்கள் என்று கூறிருந்தார். எனவே இதுதொடர்பாக அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார் இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory