» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிரத்தின் முதல் பெண் தேர்தல் ஆணையர் கரோனா தொற்றால் உயிரிழப்பு!!

வியாழன் 16, ஜூலை 2020 4:15:15 PM (IST)

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணைரான நீலா சத்யநாராயண் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணைரான நீலா சத்யநாராயண் (வயது 72). கடந்த 1972-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். பின்னர், பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலா சத்யநாராயண் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியான நீலா சத்யநாராயன் மராத்தியில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory