» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்: பிரதமர் மோடி புகழாரம்

வியாழன் 16, ஜூலை 2020 5:49:50 PM (IST)

"திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்" என பிரதமர் மோடி, ட்விட்டரில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரதமர் மோடி திருக்குறளை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும்  கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி அடிக்கடி தனது பேச்சின்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவார். சமீபத்தில் லடாக்கில் ராணுவ வீரர்ககள் இடையே பேசும்போது

‘‘மறமானம் மாண்ட வழிச்செலவு தோற்றம்
எனநான்கே ஏலம் படைக்கு’’

என்ற திருக்குறளை குறிப்பிட்டிருந்தார். இதற்கு ‘‘வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியவராதல் எனும் நான்கும் கடைக்கு காவல் அரண்கள்’’ எனப் பொருள்படும்.


மக்கள் கருத்து

ஆசீர். விJul 17, 2020 - 11:42:26 AM | Posted IP 162.1*****

இங்கே திருக்குறளை உயர்த்தி ஒரு ட்வீட் போடணும். அங்கே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி பி எஸ் சி போர்டில் இருந்து திருக்குறளை நீக்கவேண்டும். உங்க ரெட்டை வேடம் யாருக்கு தெரியுதோ இல்லையோ தமிழக மக்களுக்கு நல்லா தெரியுது. உங்க வீரா வேஷம் எல்லாம் தமிழக மக்களுக்கு ஒரு காமெடி அவ்வளவுதான். ஒரு மீம்ஸ்க்கு போதும். என்னத்தை தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் தமிழகத்தில் நீங்க நோட்டாவுக்கு கீழேதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory