» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தியில் ஆக.5-ல் ராமர் கோவில் பூமிபூஜை: பிரதமர் மோடி பங்கேற்பு - பாதுகாப்பு அதிகரிப்பு!

வியாழன் 30, ஜூலை 2020 3:51:53 PM (IST)லக்னோவில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அன்றைய தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

மாநிலத்தில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர பிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, 9 மூத்த காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் பூமி பூஜை நடைபெறும் நாள் அன்று, அரசியல் சாசனம் 370 - வது பிரிவு நீக்கப்பட்ட முதல் ஆண்டு தினம் வருவதாலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் வருவதையும் ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகள் நடைபெற்று வருவதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 31, 2020 - 11:24:32 AM | Posted IP 173.2*****

இந்த கொடியகாலகட்டத்தை கடந்து கொண்டுஇருக்கும் இந்தியாவில் இப்போது இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தாமல் கொரோனா உக்கிரம் சற்று தணிந்தபின் நடத்துவது உத்தமம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory