» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

வெள்ளி 31, ஜூலை 2020 4:18:59 PM (IST)

விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விண்வெளித் துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி துவங்கி உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுகணை தள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ராக்கெட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும்.

ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் 2 ஏவுகணை தளங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால், அவர்கள் அதற்காக இஸ்ரோவின் சொத்துக்களை பயன்படுத்திகொள்ள விண்ணப்பிக்கலாம். தனியார் துறையின் தேவைகளின் அடிப்படையில் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செயல்முறையை துவங்க விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களின் தேவைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இஸ்ரோவின் மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதால் தற்போது மூடப்பட்டுள்ளது.கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயற்கைகோள் ஏவுதல் மேற்கொள்வது கடினம். அடுத்து வரும் மாதங்களில் நிலைமையை பொறுத்து செயற்கைகோள்கள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory