» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெய்ரூட் வெடி விபத்து : பிரதமர் மோடி இரங்கல்

புதன் 5, ஆகஸ்ட் 2020 1:23:14 PM (IST)

பெய்ரூட் வெடி விபத்தில் காயமுற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்தன. இந்த விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், பெய்ரூட் வெடிவிபத்தின் விளைவாக உயிரிழப்பு நிகழ்ந்து பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன. இச்செய்தி எனக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர், படுகாயம் அடைந்தோரின் குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory