» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது; ராஞ்சி விமான நிலையத்தில் பரபரப்பு

சனி 8, ஆகஸ்ட் 2020 3:32:51 PM (IST)

மும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதிய சம்பவம் ராஞ்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள ராஞ்சி விமான நிலையத்தில் ஏர் ஆசியா விமானம் (ஐ5-632) ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு மும்பை நோக்கி புறப்பட தயாரானது. அந்த விமானம் மேலெழுந்தபொழுது அதன் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளார். 

விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விமானத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவற்றை அறிந்து, அவற்றை சரி செய்த பின்பே விமானம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு வந்திறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் யாரும் மீளாத நிலையில், பெரும் விமான விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory