» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா சிகிச்சை மையம் தீவிபத்தில் 10பேர் பலி: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 12:59:08 PM (IST)ஆந்திர பிரதேசத்தில் கரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது.  இதனால், அங்கிருக்கும் ஓட்டல்கள், கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றை, தனியார் மருத்துவமனை ஒன்று குத்தகைக்கு எடுத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஆக பயன்படுத்தி வந்தது.  அந்த மருத்துவமனையில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.  அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியும் நடந்தது.  மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.  இந்த தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதேபோன்று முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன், வருத்தமும் தெரிவித்து உள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி கண்டறிய அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  மீட்பு பணிகளை மேற்கொள்ள அதன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறியதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளார்.

இதுபற்றி மாநில உள்துறை மந்திரி கூறும்பொழுது, தீ விபத்து நடந்த ஓட்டலில் 40 நோயாளிகள் மற்றும் 10 மருத்துவ பணியாளர்கள் இருந்துள்ளனர்.  மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஆந்திர பிரதேச அரசு அறிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory