» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது

புதன் 12, ஆகஸ்ட் 2020 3:53:05 PM (IST)

1994-ம் ஆண்டில் பல்வேறு முக்கியஆவணங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக பொய்யாகத் தொடரப்பட்ட வழக்கில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடாக கேரள அரசு நேற்று வழங்கியது.

தவறானக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்னை கேரள அரசு சட்டவிரோதமாக கைது செய்து, கொடுமையப்படுத்தியதாக 78 வயதான விஞ்ஞானி நம்பி நாராயண் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடித்துக்கொள்ள கேரள அரசு ஒப்புக்கொண்டது. அதன்அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது.

கடந்த 1994-ம் ஆண்டு, இஸ்ரோ தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட இரு விஞ்ஞானிகள், ஒரு மாலத்தீவு பெண் என 4 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். ஏறக்குறைய இரு மாதங்கள் நம்பி நாராயண் கேரள சிறையில் இருந்தார். ஆனால், இந்தவழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை முடிவில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரியவந்தது.

ஆனால், இந்தவழக்கில் நம்பி நாராயண் சிறை செல்லக்காரணமாக இருந்த முன்னாள் போலீஸ் டிஜிபி சிபி மாத்யூ, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்கள் ஜோஷ்வா, விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை ஏதும் தேவையில்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து நம்பி நாராயண் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தன்னை தவறான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை கோரியும், மனஉளைச்சலுக்கு இழப்பீடு கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு ஒப்புக்கொண்டதால் வழக்கு முடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் கட்டமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. இதுதவிர தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மீதம் வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை கேரள அரசு நம்பி நாராயணுக்கு நேற்று வழங்கிவிட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory