» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 3:48:06 PM (IST)

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  23.96 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உள்ளது. கரோனா தொற்று பாதிப்புடன் 6,53,622 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கரோனா பாதிப்புகளில் இருந்து 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory