» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்கும்: பினராயி விஜயன்

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 4:34:18 PM (IST)மூணார் ராஜ மலை பெட்டி முடியில் நிலச்சரிவு நடந்த பகுதிகளை கவர்னர் ஆரிப் முகம்மதுகான், முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மூணார் புறப்பட்டு சென்ற இருவரும்  கார் மூலம் நிலச்சரிவு நடந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டதோடு, சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, மூணார் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல் மந்திரி பினராயி விஜயன், வருவாய் துறை மந்திரி சந்திரசேகரன், மாநில டி.ஜி.பி லோக்நாத் பெகரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் பினராயி விஜயன் கூறியதாவது: நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடு, அரசு வேலையுடன், குழந்தைகளின் படிப்பு செலவை அரசு கவனித்துக் கொள்ளும் , வீடு கட்டுவதற்கு நிலம் மற்றும் நிதி தேவை அதற்கான அனைத்து வசதிகளையும் கண்ணன் தேவன் கம்பெனி இதற்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். வேலை இழந்துள்ள தொழிலாளர்களின் மறு வாழ்வுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க  அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory