» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் - மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்!!

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 5:09:52 PM (IST)

சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றுகாங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வறுமையை ஒ​ழிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது ஆதலால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடோடு ஒன்று ஒருங்கிணைந்தது என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் கடந்த  6 ஆண்டுகளாக எந்தவித சிந்தனையும் இன்றி மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சோனியா காந்தி, மோடி அரசை சாடியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory