» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் கரோனா நோயாளிகளுக்கும் வாக்களிக்க வாய்ப்பு: கேரள அரசு தீர்மானம்

புதன் 16, செப்டம்பர் 2020 5:14:06 PM (IST)

கேரளாவில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கரோனா நோயாளிகள், வாக்களிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் தலைமை செயலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் கூறியதாவது: கரோனா நோய் தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம் 6 நாள் சம்பளம் வீதம் 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை 9 சதவீத வட்டியுடன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும். 

இந்த தொகையினை ஊழியர்கள் 20 21 ஏப்ரல் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 5 வருட காலாவதி நிறைவு பெற்றதையடுத்து அந்த அமைப்பு களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கரோனா நோயாளிகளும் , படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கும், வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இந்த நோயாளிகள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்தலுக்கு முந்தைய நாள் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory