» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளது: ராகுல் காந்தி

வெள்ளி 16, அக்டோபர் 2020 5:18:24 PM (IST)

இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசால் கரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த பன்னாட்டு நிதியத்தின் ஒப்பீடு வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட கரோனாவை சிறப்பாகக் கையாண்டுள்ளன என்று பதிவிட்டுள்ளார்.  இதில், இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.3% வீழ்ச்சியடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

உண்மOct 17, 2020 - 09:47:54 AM | Posted IP 162.1*****

இந்த இத்தாலி புள்ள பப்புவை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுங்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory