» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அன்னையின் ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும்: பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து

சனி 17, அக்டோபர் 2020 12:37:51 PM (IST)

"ஏழைகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர அன்னையின் ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும்" என பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்துக்களின் முக்கிய திருவிழாவான நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவங்கள், கொலு கண்காட்சிகள் தொடங்கி உள்ளன. நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நவராத்திரியின் முதல் நாளான இன்று மாதா சைல புத்ரியை (அன்னை பார்வதி) வணங்குகிறேன். அன்னையின் ஆசீர்வாதங்களுடன், நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கட்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர அன்னையின் ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும். இவ்வாறு மோடி கூறி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory